சட்டவிரோத மாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது .

எஸ்.சதீஸ்


திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கிரேக்லி
வனப்பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த
நான்கு சந்தேக நபர்களை திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த கைது சம்பவமானது 11.06.2021. வெள்ளிகிழமை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொட்டகலை கிரேக்லி தோட்ட வனப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு
வந்த சந்தேக நபர்கள் குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த
இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே

 இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு 80ஆயிரம் லிற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தக்கு பயன்படுத்தபட்டு வந்த உபகரனங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ள தாகவும் கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை கிரேக்லி தோட்டபகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

நடலாவி ரீதியில் பயணத்தடை அமுல் படுத்தப்பட்டுள்ள வேலையில் நாட்டில்
உள்ள அனைத்து மதுபான சாலைகளும் முடப்பட்டுள்ள நிலையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளிலும் இது போன்ற சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியினை மேற்கொண்டு அதிக விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும்
பொலிஸாரினால் பினை வழங்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடதக்கது


Post a Comment

0 Comments