கிழக்கில் இதுவரை 32677 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 32677 கொவிட்19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபிக் தெரிவித்தார்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9373, திருகோணமலை மாவட்டத்தில் 7835, அம்பாறை மாவட்டத்தில் 15469, தடுப்பூசிகள் இதுவரையில் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேற்றைய தினம் (10) மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 4275, மட்டக்களப்பு மாவட்டத்தில் 4321, அம்பாறை மாவட்டத்தில்7886 என மொத்தமாக நேற்றைய தினம் கிழக்கில் 16482 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது.

மாகாணத்திற்கு 75000 எழுபத்தி ஐயாயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகதாகவும் தடுப்பூசிகள் அனைத்திம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகங்கள் ஊடாக செலுத்தப்படுவதாகவும் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments