பாடசாலைகள் திறப்பது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்புசுகாதார அமைச்சினூடாக அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரேனா பரவலையடுத்து பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி பயணத்தடை அகற்றப்படவுள்ளதாகவும் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய பொது மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments