வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு


விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

கடல் பிராந்தியங்களிலும் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து, மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதனால், அதிக மழைவீழ்ச்சி மற்றும் காற்று என்பன காரணமாக, கடற்றொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட, நாட்டின் பொருளாதார வாழ்வாதாரங்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் முதல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments