கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் நிறைவேற்றம் - முழுவிபரம் !கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலம் தொடர்பான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பில், ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

முன்னதாக இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து, சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

உயர் நீதிமன்ற பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சட்டமூலம் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவு பெற்ற சந்தர்ப்பத்திலும் மூன்றாம் வாசிப்பு நிறைவடைந்த சந்தர்ப்பத்திலும், வாக்கெடுப்பை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதிலும் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்தனர்.

ரிஷாட் பதியுதீனின் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களில் அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் சட்டமூலத்தை ஆதரித்ததுடன் ரிஷாட் பதியுதீன் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை.

இதேவேளை, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு பதவி நிலைக்கு அமைவான இலங்கை பிரஜைகளே நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி கொண்டு வந்த திருத்தம் மீதான வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டார்.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்

உதய கம்மன்பில
காமினி லொக்குகே
ஜகத் குமார
தினேஷ் குணவர்தன
பிரதீப் உந்துகொட
பிரேம்நாத் சீ. தொலவத்த
பந்துல குணவர்தன
மதுர வித்தானகே
விமல் வீரவன்ச
சரத் வீரசேகர
சுசில் பிரேமஜயந்த

எதிர்த்து வாக்களித்தவர்கள்

சஜித் பிரேமதாச
எஸ்.எம்.மரிக்கார்
மனோ கணேசன்
கலாநிதி ஹர்ஷ டி சில்வா
பாட்டலி சம்பிக்க ரணவக்க
அனுரகுமார திசாநாயக்க

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளாதவர்கள்

கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ
முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்றைய அமர்வில் பங்கேற்கவில்லை

கம்பஹா மாவட்டத்தில் ஆதரவாக வாக்களித்தவர்கள்

இந்திக்க அனுருத்த
உப்புல் மஹேந்திர ராஜபக்ஸ
சஹன் பிரதீப் வித்தான
கோகிலா குணவர்தன
நலின் பெர்னாண்டோ
நாலக்க கொடஹேவா
நிமல் லன்சா
பிரசன்ன ரணதுங்க
பிரசன்ன ரணவீர
மிலான் ஜயதிலக்க
லசந்த அழகியவன்ன
சிசிர ஜயகொடி
சுதர்ஷனி ​பெர்னாண்டோபுள்ளே

எதிர்த்து வாக்களித்தவர்கள்

சரத் பொன்சேகா
காவிந்த ஜயவர்தன
அஜித் மான்னப்பெரும
ஹர்ஷன ராஜகருணா
விஜித்த ஹேரத்

களுத்துறை மாவட்டத்தில் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள்

அனுப பெஸ்குவல்
ஜயந்த சமரவீர
பியல் நிஷாந்த டி சில்வா
ரோஹித்த அபேகுணவர்தன
லலித் எல்லாவல
சஞ்ஜீவ எதிரிமான்ன

எதிர்த்து வாக்களித்தவர்கள்

குமார வெல்கம
ராஜித்த சேனாரத்ன

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள்

விதுர விக்ரமநாயக்க
மஹிந்த சமரசிங்க

Post a Comment

0 Comments