நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 1923 பேரில் 1025 தொற்றாளர்கள்  மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 113,676 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுள் 529 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவுள்ளதுடன் அதில் 60 பேர் பிலியந்தலை, 54 பேர் மொரட்டுவை , 47 பேர் பொரலஸ்கமுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலும் தலா 35 பேர் முல்லேரியா மற்றும் புறக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர்.

இதேவேளை களுத்துறை -264 பேர், கம்பஹா- 232 பேர், காலி- 154 பேர், குருநாகல் – 122 பேர், நுவரெலியா – 104 பேர், இரத்தினபுரி – 82 பேர்,மாத்தறை- 81 பேர், அனுராதாபுர – 69 பேர் , பொலன்னறுவை -66 பேர், கண்டி -58 பேர், மாத்தளை – 50 பேர் ,அம்பாறை -20 பேர், புத்தளம் – 18 பேர் , யாழ்ப்பாணம் – 16 பேர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் அம்பாந்தோட்டை – 11 பேர், திருகோணமலை- 10 பேர், மொனராகலை, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஆறு பேர், மட்டக்களப்பு, கேகாலை மாவட்டங்களில் தலா நான்கு பேர், மன்னார் – மூன்று பேர், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தலா இருவர் என்ற ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments