நீரில் மூழ்கி பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு


திவுலபிட்டி - ஹல்பே - மனம்பெல்ல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட நீர் நிறைந்த குட்டையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களுள் 42 வயதான தாயும்,10 வயதான அவரது தாயும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உயிரிழந்த இன்னொருவர் மேற்படி நபர்களின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 9 வயதான சிறுமி எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கீரை பறிக்கச் சென்ற போது அவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments: