நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை


சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம், மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments