பாடசாலைகளை தொடர்ந்து மூடி வைத்திருப்பதே சிறந்தது - பேராசிரியர் நீலிகா மலவிகே


தற்போதைய சூழ்நிலையில் பாடசாலையை மூடி வைத்திருப்பதே சிறந்தது என்று,ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று விஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் பரவுகின்ற திரிபடைந்த வைரஸானது சிறார்களையும் பாதிக்கக் கூடியதுடன்,மிகவும் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டுள்ளது.

எனவே பாடசாலைகளை மூடுவதற்கு மேற்கொண்ட தீர்மானம் சிறந்த தீர்மானமாகும்.

அதேநேரம் மாணவர்களுக்கு கொவிட்19 தொற்று நோய், மாற்று வழிகளில் பரவாது தடுக்க வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில்,சிறார்களை கட்டுப்பாடுகளுடன் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments