கடும் மழை - பொகவந்தலாவ பகுதியில் மண் சரிவு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கீழ் பிரிவு தோட்டத்தில்  உள்ள 112ம் இலக்க தொடர் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று (03) இரவு 07 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்சரிவு ஏற்பட்டுள்ள தொடர் லயன் குடியிருப்பின் ஒரு பகுதியில் மாத்திரம் 09 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் வசித்து வருவதோடு குறித்த தொடர் லயன் குடியிருப்புகளில் உள்ள மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள்  கவலை வெளியிட்டு்ளனர்.

குறித்த தோட்டபகுதியில் உள்ள லயன் குடியிருப்புகள் நீண்டகாலம் பழமை வாய்ந்ததாகவும்  மக்கள் வாழும் குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் காணப்படுவதாகவும்  இவ்வாறு தொடர்ந்து கடும் மழை பெய்து வரும் நிலையில் எமது தொடர் லயன்குடியிருப்புகள் சரிந்து விழும் அபாயத்தினை எதிர்நோக்க வேண்டி நேரிடும் எனவும் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  நோர்வுட் பொலிஸாரின் ஊடாக பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட்  319ஜி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

0 Comments