தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்களின் அடிப்படையில் சுகாதார வழிகாட்டி மாற்றமடையும் !

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயாகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன  நாளாந்தம் இனங்காணப்படும்  கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்ட பின்னரே தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மாற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனதெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்காக இந்த வழிகாட்டல் வெளியாக்கப்பட்டது.

பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலோ அல்லது குறைவடைந்தாலோ இந்த வழிகாட்டல் மாற்றமடையும் என்றும் தெரிவித்துள்ளார்

எவ்வாறிருப்பினும், பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வழிகாட்டல் எவ்வாறாக மாற்றமடையும் என்பது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments