நடிகை பியூமி ஹங்சமாலி மற்றும் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க ஆகியோர் கைது

 


கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் பிரபல நடிகை பியூமி ஹங்சமாலி ஆகியோர் கொழும்பு, கோட்டை காவல்நிலையத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விருந்துபசாரத்தில் 20 முதல் 25 பேர் கலந்துகொண்டிருந்ததாக காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேற்படி நட்சத்திர விடுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, விருந்துபசாரத்துக்கு வருகைதந்த ஏனைய நபர்களையும் அடையாளம் காண நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments