மொழி புறக்கணிப்பு தொடருமானால் எதிர்காலத்தில் தெருப்போராட்டம் தான் ! -மனோ கணேசன்


தமிழை தவிர்த்து சீனர் மொழி சட்டத்தை மீறுகிறார்கள். என பாரபளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மனோ-கணேசன் தனது கீச்சகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார.

சிங்களம், தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டுமுள்ள பெயர் பலகைகளும் உள்ளன நான் சீன தூதுவரை சந்தித்து இதுபற்றி விளக்கியுள்ளதாகவும்  எனினும் சாதகமான நிலமை இல்லை என்றும் இந்நிலை தொடருமானால் நாம் தெருப்போராட்டம் செய்ய வேண்டி வரும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

 பெயர் பலகை படம் ஒரு வருடத்துக்கு முன் அகற்றப்பட்டது என சீனதூதரகம் எனக்கு கூறுகிறது. 

யோசித்து பார்த்தால் தமிழை புறக்கணிக்க சீனர்  நமது இலங்கை அரசிடம்தான் கற்றுள்ளனர் போல் தெரிகிறது. ஏனெனில் உள்ளூர் நிலைமை இதைவிட மோசம்

என தனது உத்தியோகபூர்வ கீச்சகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.   

No comments: