தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறப்பு


தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நாளை காலை 5 மணி முதல் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த மத்திய நிலையம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: