மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு கடல் பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும்


மறு அறிவித்தல் வரை காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடலில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் இதனால் கடற்தொழில் நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

தற்போது அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கோ அல்லது பாதுகாப்பான இடத்துக்கோ செல்லுமாறு கோரப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களும் அப்பகுதியில் உள்ள கடற்படையினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments