தேசிய அடையாள அட்டை அனுமதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு (தெழிவூட்டல்)



இன்று (12) இரவிலிருந்து 31 வரை பயணக்கட்டுப்பாடு!குழப்பமில்லா விளக்கம்! கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து முகமாக இன்று (மே 12) இரவிலிருந்து மே 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

எப்படி? இன்று இரவு 11 மணியிலிருந்து நாளை அதிகாலை நான்கு மணிவரை நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்! மே 13ஆம் திகதி (நாளை) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை 17ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை முழுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும். 

இதனை முழு முடக்கம் என்று அழைத்தாலும் நாட்டில் அவசரகால நிலை அமுலில் இல்லாததால், ஊரடங்கு பிரகடனம் எனச்சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 31ஆம் திகதி வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை மாவட்டங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடும் அமுலில் இருக்கும்.

 பயணக்கட்டுப்பாடு இல்லாத காலப்பகுதியில் (அதிகாலை நான்கு மணிமுதல் இரவு 11 மணிவரை) குடும்பத்தில் ஒருவர் தமது அடையாள அட்டையின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்று வர முடியும். 

அதாவது அடையாள அட்டையின் கடைசி இலக்கம் ஒற்றை இலக்கத்தில் (1, 3, 5, 7, 9) இருந்தால் ஒற்றை நாட்களில் வெளியில் செல்ல முடியும். அடையாள அட்டையின் கடைசி இலக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தால் (0, 2, 4, 6,  இரட்டை தினங்களில் வெளியில் செல்லலாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். 

(ஒற்றை நாட்கள் - ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி இரட்டை நாட்கள் - திங்கள், புதன், வெள்ளி) இதுதவிர, அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்துக்கு உரிய முறையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: