நாட்டில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு கொழும்பு செல்ல அனுமதி


கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு நாளை(16)  முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தொிவித்தார்.

இதன்போது, அவர் மேலும் கூறுகையில், பிரதேச செயலகங்களில் இதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு, மொத்த விற்பனை நோக்கில் பொருட்களை கொள்வனவு செய்யவதற்காக மாத்திரம் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு வரமுடியும் என தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக, அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை நாடுமுழுவதும் விநியோகிப்பதற்கான நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களும், தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன.

எனினும், இன்றும், நேற்றும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வர்த்தகர்கள் பிரவேசிக்கவில்லை. இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு மொத்த விற்பனையாளர்கள், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில், அவசியமான நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments: