அத்தியாவசிய தேவை வர்த்தமானி | ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மையம் எதிர்ப்பு


அரச பணியாளர்கள் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்காக சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள வேளையில் அதனை புறக்கணித்து அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வர்த்தமானி வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மையம் தெரிவித்துள்ளது.

நுகேகொடையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் செயலாளர் தம்மிக்க முனசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் கொவிட்-19 தொற்றுறுதியாகி மரணித்தனர்.

அத்துடன் பல அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதுதவிர பல அரச சேவை பணியாளர்களுக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அத்தியாவசிய சேவை எனக்கூறி அரச பணியாளர்களை, அரசாங்கம் சேவைக்கு அழைத்துள்ளது.

இது தொடர்பில் சுற்றுநிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சுற்றுநிரூபம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை என ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மையத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த காலத்தில் கோரப்பட்ட வகையில் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments