அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் முக்கிய அறிவிப்பு

ஜே.கே.யதுர்ஷன் 


நாட்டின் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு  கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்படும் காலங்களில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு வர்த்தக ரீதியிலான அறிவிப்பு ஒன்றை அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகம் விடுத்துள்ளது.

அந்த வகையில் மக்களது நுகர்வுப் பொருட்களை வீதி வழியாக (நடமாடும் வர்த்தக நிலையம் ) விற்பனை செய்வதற்கான அனுமதி பத்திர விண்ணப்பத்தினை  திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அனைத்து  கிராம நிலாதாரிகளிடம் பெற்றுக் கொள்ள முடியும் என திருக்கோவில் பிரதேச செயலளர் த.கஜேந்திரன்  தெரிவித்துள்ளார்.


No comments: