நாட்டில் முதல் முறையாக நாளொன்றில் 3,051 பேருக்கு கொவிட்-19 தொற்று


நாட்டில் முதல் முறையாக நாளொன்றில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை இன்று 3000ஐக் கடந்துள்ளது. இலங்கையில், ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.


இன்று இதுவரையான காலப்பகுதியில், 3,051 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 150,771 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 27,389 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், மேலும், 1,222 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து இன்று குணமடைந்தனர்.

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது

Post a Comment

0 Comments