கொரோனா பரவல் - 4 பிரதான தபால் நிலையங்கள் மூடப்பட்டன


நாற்பதுக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொம்பனித்தெரு, பாணந்துறை, வாழைத்தோட்டம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளின் பிரதான தபால் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து 22 உப தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தபால் சேவைகள் இடம்பெற மாட்டாது எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.

No comments: