புளியாவத்தை ஹோன்சி,மற்றும் பிலிங்பொனி பகுதிகளில் 30 பேருக்கு கொரோனா தொற்றுஎஸ்.சதீஸ்

நோர்வுட் பொலிஸ்பிரிவு பொகவந்தலாவ பொதுசுகாதார காரியாலயத்திற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்த ஹோன்சி,மற்றும் பிலிங்பொனி பகுதியில் மேலும் 30 கொரேனா தொற்றாளர்கள் இனங்கானபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகதார
அதிகாரிகள் தெரிவித்தனர் .

13.05.2021.வியாழகிழமை மாலை வெளியான பி.சீ.ஆர் அறிக்கையின் ஊடாக இந்த 30 தொற்றாளர்களும் இனங்கான பட்டுள்ளனர்.

கடந்த 09ம் திகதி குறித்த தோட்டபகுதியில் 200பேருக்கு பி.சீ.ஆர் பரீசோதனை
மேற்கொள்ளப்பட்டது இதுவரையிலும் பொகவந்தலாவ பொசுகாதார
காரியாலத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் இதுவரையில் 281 தொற்றாளர்கள்
இனங்கானபட்டுள்ளதாகவும் , இன்ஜஸ்ரீ கிராம சேவர் பிரிவிற்குட்பட்ட
இன்ஜஸ்ரீ பிலிங்பொனி ஆகிய பகுதிகள் தொடர்ந்தும்
தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments