மன்னார் பேசாலையில் 14கிலோ 175கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் பேசாலை 8ம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த கேரளா கஞ்சா 14கிலோ 175கிராம் பேசாலை பொலிஸாரினால் நேற்று (15)மாலை கைப்பற்றபட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி மற்றும் பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பொ.ப.சோமயித்,உ.பொ.ப.விவேகாணந் தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது 


No comments: