அம்பாரை கனகர் கிராம நில மீட்பு போராட்டம்.| கூடாரம் இனந்தெரியாத நபர்களால் உடைப்புஅம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கனகர் கிராம மக்கள் தங்களது பூர்வீக நிலங்களை தமக்கு வழங்கப்பட வேண்டும் என கடந்த 2018.08.14 அன்று கனகர் கிராம வாயிலில். தங்களது நில மீட்பு போராட்டத்தினை அமைதியான முறையில் ஆரம்பித்தனர் .

இதன் பின்னர் அரசாங்கத்திற்கு குறித்த விடையம் சம்மந்தமாக பலதரப்பட்ட பிரிவினரால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருத்தது .

இந்த நிலையில் அரசாங்கத்தூடமிருந்து சாதகமான பதில் கிடைத்திருந்தாலும் தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாமல் நில மீட்பு போராட்டத்தினை கைவிடுவதில்லை என்ற நோக்கத்துடன் தாம் இருந்ததாக கனகர் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்

இதன் பின்னர் கொரோனா அச்சம் காரணமாக அரசாங்கம் விடுத்த அறிவிப்பிற்கு அமைய தனிமைப்படுத்தல் விதிகளை மதித்து வீட்டில் இருந்ததாக நீல மீட்பு போராட்ட குழுவின் தலைவி புஞ்சிமாத்தையா ரங்கத்தனா குறிப்பிட்டார்.

இன்றுடன் போராட்டம் ஆரம்பித்து 2 வருடங்களும் 9 மாதங்களும் முடிவடையும் நிலையில் நேற்றைய தினம் இனந் தெரியாத நபர்களால் நிலமீட்பு போராட்ட தற்காலாக கூடாரத்தின் தகரங்கள் களவாடப்பட்டு கூடாரம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த குழுவினர் எமக்கு தெரிவித்ததுடன் அரசியல் வாதிகள் , சமூக ஆர்வலர்கள் இதில் கவனமெடுத்து உரியதீர்வை வழங்க வேண்டும் என குறிப்பிட்டனர்

Post a Comment

0 Comments