ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

P2P வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை !


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 கல்முனை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரபல ஊடக மொன்றிற்கு உறுதிப்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments: