சிஎஸ்கே அணியின் புதிய நம்பிக்கை மொயின் அலி - நேற்று பாதி ஆட்டத்தில் வெளியேறியமைக்கான காரணம்


சிஎஸ்கே அணியின் புதிய நம்பிக்கை மொயின் அலி நேற்று பாதி ஆட்டத்தில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎஸ்கே அணியில் இந்த வருடம் இணைந்திருக்கும் மொயின் அலி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். சிஎஸ்கே அணிக்காக ஒன் டவுன் வீரராக இறங்கி மொத்தமாக இவர் புதிய புரட்சியை செய்துள்ளார்.

முதல் பாலில் இருந்து அதிரடி காட்டுவது. குறைவான பந்துகளில் 30-40 ரன்களை எடுத்து சிஎஸ்கேவின் ரன் ரேட்டை உயர்த்துவது என்று மொயின் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறார்.

பவுலிங்கிலும் மொயின் அலி எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற மொயின் அலிதான் முக்கியமான காரணமாக இருந்தார். நேற்றும் மொயின் அலி சிறப்பாகவே பேட்டிங் செய்தார்.

நேற்று பீல்டிங் போது மொயின் அலி பாதி ஓவர்களில் வெளியேறினார். பாதி ஆட்டத்தில் பெவிலியன் சென்றவர் அதன்பின் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. நேற்று இவர் பவுலிங்கும் செய்யவில்லை. இதனால்தான் மிடில் ஓவர்களில் சிஎஸ்கே கொஞ்சம் திணறியது.

நேற்று பவுண்டரி ஒன்றை தடுக்கும் போது இவரின் காலில் காயம் ஏற்பட்டது. லேசாக வலுக்கியவர், பின் நொண்டியபடி நடந்து சென்றார். இதனால் மீதமுள்ள ஆட்டத்தில் இவரால் நேற்று கலந்து கொள்ள முடியவில்லை.

இவருக்கு காலில் ஏற்பட்ட காயத்தை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் இந்த காயம் பெரிதாக இல்லை என்கிறார்கள். ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதால் அவரை உட்கார வைத்தனர். அடுத்த போட்டியில் இவர் ஆடுவதில் சிக்கல் இருக்காது என்கிறார்கள்.

No comments: