பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது


பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்கும் தீர்மானம் பிற்படப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27ம் திகதி திறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் பின்னர் திறக்க காதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: