ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

எம்மை மீண்டும் அரசாங்கம் ஏமாற்றுகிறதா ? பொகவந்தலாவ மக்கள் பகிரங்க கேள்வி

 

எம்மை மீண்டும் அரசாங்கம் ஏமாற்றுகிறதா  ?  அல்லது தொழிற்சங்கங்கள் எமாற்றுகிறதா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி?

ஆயிரம் ருபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் பெற்று கொடுத்தாலும் நாலாந்தம் தொழிலாளர்கள் பறிக்கும் பச்சை தேயிலை கொழுந்தின் அளவில் ஆயிரம் ருபாய் சம்பளத்தை எமக்கு வழங்கி எம்மை மீண்டும் அரசாங்கம் ஏமாற்றுகிறதா அல்லது தொழிற்சங்கம் ஏமாற்றுகிறதா என பொகவந்தலாவ கெம்பியன் முத்துலெச்சுமி தோட்ட தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிருவனத்தின் கிழ் இயங்கும் பொகவந்தலாவ,
கெம்பியன், லொய்னோன், பொகவான, கொட்டியாகலை, பெற்றோசோ, ஆகிய
தோட்டபகுதிகளில் வாரம் ஒன்றுக்கு இரண்டு நாள் மாத்திரம் தொழில்
வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ கெம்பியன் முத்துலெச்சுமி தோட்டபகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது
ஆர்ப்பாட்டகாரர்கள் இதனை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில். நாள்
ஒன்றுக்கு 14கிலோ தேயிலை கொழுந்து மாத்திரம் பரித்து வந்தோம் தோட்ட
நிர்வாகம் 18தொடக்கம் 20கிலோவரை தேயிலை கொழுந்தினை பறிக்கும் மாறு
வழியுருத்தி வருகிறது எம்மால் தோட்ட நிர்வாகம் கோறும் அளவினை
பறிக்கமுடியாது. எமது தேயிலை தேயிலை தோட்டங்கள் கடுகலாக காட்சி
அழிக்கிறது. இவ்வாறு இருக்கின்ற போது நாம் எப்படி அதிகமான தேயிலை
கொழுந்தினை பறிக்கமுடியும்.

ஆனால் தொழிற்ங்க பிரதிநிதிகள் கூறுகின்றனர் ஆயிரம் ருபா சம்பளம்
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது வழமையாக பறித்த தேயிலை கொழுந்தின் அளவினையே பறிக்குமாறு வழியுருத்துகிறார் 

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மறுதபாண்டி ராமேஸ்வரன் கூறுகிறார் ஆயிரம் ருபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது தோட்ட நிர்வாகங்கள் கோறும் இரண்டு அல்லது ழூன்று கிலோ தேயிலை கொழுந்தினை பறித்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை என கூறுகிறார். செந்தில் தொண்டமான் கூறுகிறார் 750ருபாய் சம்ளம் பெற்ற காலப்பகுதியில் பறித்த கொழுந்தின் அளவை பறிக்குமாறு கூறுகிறார் 

நாம் யார் கூறுவதை கேட்டு கொழுந்து பறிப்பது என கூறும் மக்கள் எம்மால் எக்காரனத்தை கொண்டும் 18, 20 கிலோ பறிக்க முடியாது சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென கோறிக்கை விடுத்தனர்.

No comments: