கோமாரி பிரதேச மக்களின் கவனத்திற்கு ! மாசடையும் வனப்பகுதி...

இன்று நாடளாவிய ரீதியில் சிங்கராஜவனம் ஒரு பேசு பொருளாக காணப்படுகின்ற நிலையில் சூழல் மாசடைதல், மற்றும் சூழலை பாதுகாக்க இலங்கை அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள், சமூக தொண்டு நிறுவனங்கள் என்பன இயற்கையினை பாதுகாக்கும் பொருட்டு மரநடுகைத்திட்டம் மற்றும் விதைப்பந்து எறிதல் என பல வகையான வழிமுறைகளை கையாண்டு சூழலை பாதுகாப்பதுடன் காடுகளை உருவாக்க பல சிரமங்களை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட கோமாரி பிரதேசமானது அதன் இயற்கை அமைவிடத்திற்கு பேர்போன பிரதேசமாக காணப்படுவதுடன் அழகிய வானாந்தரப் பகுதிகளையும் கடற்பரப்புக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பிரதேசமாக காணப்படுவதுடன் வெளிநாட்டவரின் வருகை அதிகம் கொண்டமைந்த சுற்றுலாத்தளமாக இது காண்படுகின்றது.

மேட்டு நிலப்பயிர் செய்கையான சோளம், கச்சான் போன்றன இங்கு பயிரிடப்படுவதுடன் வெண்டி, பயற்றை, கத்தரி போன்ற மரக்கறி வகைகளும் இங்கு அதிகமாக பயிரிடப்படுகின்றது.

மக்களின் அசமந்த போக்கால் மாசடையும் கோமாரி பிரதேச வனப்பகுதி 

இந் நிலையில் கோமாரி பிரதேசத்தின் ஆரம்பத்தில் அழகிய வனப்பகுதி காணப்படுகின்றது. குறித்த பகுதியில் துார இடங்களில் இருந்து வரும் பிரயாணிகள் இளப்பாறிச் செல்ல உகந்த இடமாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


குறித்த பகுதியில் மக்கள் புழக்கம் அதிகரித்ததால் மக்களின் அசமந்த செயற்பாட்டினால் குறித்த பகுதியின் சுற்றுப்புறச்சூழல் பிளாஸ்ரிக், பேப்பர்கள் மற்றும் உக்காத பொருட்களினால் சூழப்பட்டு அசுத்தமாக காட்சியளிப்பதுடன் குறித்த பகுதியில் மக்கள் உண்ணும் உணவுகளை பேப்பரில் சுற்றி எறிந்து விட்டுச் செல்வதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பிளாஸ்ரிக் (லஞ்சிர் பேப்பர்) சுற்றப்படும் உணவுகளை விலங்குகள் உண்பதால் விலங்குளின் உடல் பாதிப்படையும் நிலையும் இங்கு காணப்படுகின்றது.விதியால் செல்லும் போது அழைகாக காட்சியாக அமைந்த குறித்த வனப்பகுதி தற்போது வானங்களை நிறுத்தி ஓய்வெடுக்க முடியாதஅளவிற்கு அசுத்தமாக காட்சியளிக்கின்றது.

(பொத்துவில் பிரதேச சபை மற்றும் கோமாரி பிரதேச மக்கள்) இதில் கூடுதல் கவனமெடுத்து குறித்த பகுதியினை சுத்தம் செய்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிவித்தல் பலகையினை இட்டு, பிரயாணிகளால் வீசப்படும் குப்பைகளை ஓரிடத்தில் சேர்க்க குப்பைத் தொட்டியினை அமைத்து இயற்கையில் சிரிப்பிற்கு வழியமைக்க வேண்டும்.No comments: