இன்றைய IPL போட்டியின் திக் திக் நிமிடங்கள் !


இன்றைய நாள் ஜ.பீஎல் ஆரம்ப ஆட்டத்தினை  பெங்களுர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதியிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல்சலஞ்சர்ஸ் பெங்களுர்  அணித்தலைவர் விராட்ஹோலி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை முடிவு செய்தார் குறித்த முடிவு ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்விக்குறியாக இருந்தாலும் களத்தடுப்பாட்டகாரர்களின் செயற்பாட்டில் குறித்த முடிவின் கருப் பொருள் விளங்கியிருக்கும் காரணம் சென்னையில் இன்று கடும் வெப்பம் போட்டி ஆரம்பித்தது பிற்பகல் 3.30 மணி,

விராட்ஹோலியின் ஆரம்ப துடுப்பாட்டம் பிரகாசிக்காமல் சென்றாலும் மெக்ஸ்வெல் மற்றும் படிக்கல் ஆகியோரது இணைப்பாட்டம் அணிக்கு மேலும் வலுச்சேர்த்ததுடன் வெற்றியின் பக்கம்  பெங்களுர் செல்வதற்கு இவர்களின் இணைப்பாட்டம் உதவியாக இருந்தது.

பின்னர் பிடியெடுப்பில் படிக்கல் ஆட்டமிளக்க களமிறங்கிய வில்லியர்ஸின் துடுப்பாட்டம் மற்றும் நிதானமான ஆட்டத்தினால் அணி மீண்டும் வலுவான நிலைக்குச் சென்றது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிய நாளாக இன்றைய நாள் ஆட்டம் காணப்பட்டது அணித்தலைவர் களத்தில் இல்லாமல் இன்றைய நாள் ரோயல்சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 2021 ஜ.பீ.எல் போட்டியில் முதல் முறையாக 200 ரண்களை கடந்த முதல் அணியாகவும் எதிர் கொண்ட 03 போட்டிகளையும் வெற்றி கொண்ட முதல் அணியாகவும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது . 


போட்டி மாற்றம்

மெக்ஸ்வெல் 78(49) மற்றும் வில்லியர்ஸின் 76 (34) அரைச்சதம் தாண்டிய ஓட்டங்களும்  மெக்ஸ்வெல் மற்றும் படிக்கல்லின் 86 ரண் பகிர்வும் மெக்ஸ்வெல் மற்றும் வில்லியர்ஸின் 50 ரண்பகிர்வும் அணியின் வெற்றிப்பாதைக்கு வித்திட்டது எனலாம் .

களத்தடுப்பு, பந்துவீச்சு

களத்தடுப்பில் 18வது ஓவர் வரையில் வெற்றி பெறும் அணி எதுஎன்று நிர்ணயிக்கப்படாத நிலையில் வர்ணணையாளர்களின் வர்ணனை இரண்டு அணி ரசிகர்களுக்கும் திக் திக் நிமிடங்களாகவே இருந்தது ரசலின் துடுப்பாட்டம் கொல்கத்தா அணி ரசிகர்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்தாலும் 19வது ஓவர் வீசிய சிராஜின் பந்து வீச்சு ஏமாற்றத்தை கொடுத்ததுடன் பெங்களுர் அணியின் வெற்றியை நிர்ணயித்தது சிராஜ் வீசிய முதல் 05 பந்துகளையும் எதிர் கொண்ட ரசல் எதுவித ஓட்டங்களையும் பெறாமல் திண்டாடியது போட்டியை மாற்றியமைத்தது.

இன்றைய போட்டியின் முக்கிய கதாநாயகர்களாகமெக்ஸ்வெல் மற்றும் வில்லியர் அத்துடன் சிராஜையும் குறிப்பிடலாம். 

No comments: