புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்கள் பரிமாற்றம் தொடர்பில் அவதானம்


புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்கள் பரிமாற்றம் இடம் பெறக்கூடும் என்பதனால் இது குறித்து மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான போலி நாணயத்தாள்கள் உங்கள் கைகளில் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 1000 ரூபா போலி நாணயமொன்றைக் கையில் வைத்திருந்த 28 வயதுடைய நபரொருவர் நேற்றைய தினம் பனாகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 1000 ரூபா போலி நாணயத் தாள் ஒன்றைக் கடையில் கொடுத்து பொருட்களை வாங்க முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தப் புத்தாண்டு காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளவும் பொதுமக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments