கதையில் சில மாற்றங்களுடன் மீண்டும் வருகிறது கமல்ஹாசனின் ஆளவந்தான்


கமல் நடித்த ஆளவந்தான் படத்தில் சில மாற்றங்களை செய்து மீண்டும் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தாணு தயாரிப்பில் கமல் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001ம் ஆண்டு வெளியானது. ரவீணா டாண்டன், மனிஷா கொய்ராலா போன்றோரும் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் ஆளவந்தான் படத்தை சில மாற்றங்களுடன் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. 

ஆளவந்தான் - சொன்ன கதை ஒன்று, எடுத்த கதை ஒன்று. முடித்த கதை ஒன்று. அது ஒரு குழப்பமான கதையாக அமைந்துவிட்டது.ஆகையால் ஆளவந்தான் கதையில் சில மாற்றங்களை செய்து மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.இந்த படத்தை நிச்சயம் வெற்றி பெறச் செய்வேன் என்று  தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.
Post a Comment

0 Comments