சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு


சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்து வார இறுதி நாட்களில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண  பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.

வார இறுதி நாட்கள் என்பதால் போக்குவரத்து குறித்து மிக அவதானத்துடன் செயற்படவும், அத்தோடு வார இறுதி நாட்கள் என்பதால் பொது மக்கள் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வாய்ப்புள்ளது இதன்போது சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றி முகக்கவம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் கொரோனா கொத்தணி மற்றும் துணைக் கொத்தணி உருவாகி வருவதால் முடிந்தவரை தங்களின் பயணத்தை மட்டுப்படுத்துமாறு அஜித் ரோஹண பொது மக்களை வலியுறுத்துள்ளார்.

மறு பக்கம் வீதி விபத்து குறித்து கவமான செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் , இது தொடர்பாக வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் அவதானத்துடன் இருப்பதுடன் , வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிக்குமாறும் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார் .

No comments: