நேற்றைய தினம் யாழ் மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவு


நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 343 கொரோனா தொற்றாளர்களில் 128 பேர் யாழ் மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக கொவிட்-19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு  மாவட்டத்தில் 68 பேரும், கம்பஹா மாவட்டத்தில்  39 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில்  27 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 09 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில்  08 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில்  07 பேரும், காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 04 நோயாளர்கள் வீதம் பதிவாகியுள்ளனர்.

மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களில் தலா 03 பேர் வீதமும், மாத்தறையில் 02 பேரும், கண்டி, அநுராதபுரம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்த 34 பேரும் கொவிட் தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments