நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை....!


நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்யும் வகையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விவேக்கின் உடல் நிலையை பின்னடைவில் இருந்து மீட்க எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இதுபோன்று எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே மயக்க நிலையில் இருந்ததாகவும் பல்ஸ் துடிப்பு குறைந்து இருந்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்

நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையின் கார்டியாக் நிபுணர்கள் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments: