நடிகர் யோகி பாபு மீது பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு


தமிழ் சினிமாவில் முன்னணி காமடி நடிகராக வலம் வரும் நடிகர் யோகி பாபு மீது பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை பொலிஸ் தலைமையகத்தில் திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.

அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புகார் மனு விவரம் வருமாறு:- நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது.

அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன.

முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 இலட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments