கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை


வெலிமட பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 4.00 மணியளவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஒருவர் மற்றுறொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிமட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: