மேஷ ராசி - பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்


பிலவ தமிழ் புது வருடம் சித்திரை 1ஆம் தேதி புதன்கிழமை சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. 

பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பிலவ ஆண்டு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

புத்தாண்டு பிறக்கும் போது உங்கள் ராசியில் ராஜ கிரகங்கள் சூரியன், சுக்கிரன், சந்திரன் கூடியுள்ளன. ராசிக்கு 11ல் குரு, பத்தில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். கடந்த காலங்களில் பத்தில் குரு பாடாய் படுத்தி எடுத்தார். வேலையில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. நிறைய பேருக்கு வேலையில் திருப்தி இல்லாமல் இருந்தது. இனி உங்களுக்கு பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். இந்த பிலவ வருடம் மேஷ ராசிக்காரர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். சூரியன் உச்சமாக இருப்பதால் எண்ணங்கள் தெளிவாக இருக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கஷ்டங்கள் கவலைகள் நீங்கும்.

யோகங்கள் நிறைந்த ஆண்டு சூரியன் உச்சமாக இருக்கும் நேரத்தில் சந்திரன் இணைந்திருக்க புத்தாண்டு பிறக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். குதூகலம் பிறக்கும். குழந்தை பாக்கியம் யோகம் கைகூடி வரப்போகிறது. குருவின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாவது வீட்டின் மீது விழுகிறது. பொருளாதார சிக்கல்கள் நீங்கும். குருவின் பார்வையால் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். சகோதர வழிகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தைரியம் வீரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

நல்லது நடக்கும். கவலைகள் கஷ்டங்கள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும் நிதி நெருக்கடிகள் முடிவுக்கு வரும். திருமண சுப காரியங்கள் கைகூடி வரப்போகிறது. காரணம் குருவின் பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிரிந்து வாழ்ந்தவர்கள் ஒன்றாக சேரும் காலம் வந்து விட்டது. தகப்பனார் வழி சொத்துக்கள் சேரும்.

வங்கி சேமிப்பு உயரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் செய்த முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சேமிப்பும் உயரும். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு இந்த ஆண்டு நிறைவேறும். மேற்படிப்புக்காக வெளிநாடு பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

*பிலவ வருட பரிகாரம்

குடும்பத்தின் ரகசியங்களை மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வர நன்மைகள் நடைபெறும். சூரிய பகவானிடம் வேண்டிக்கொள்ளவும். 48 நாட்கள் விடாமல் விளக்கேற்றி வழிபடவும். சிவ ஆலயம் சென்று சூரிய பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். விநாயகர் வழிபாடு குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

Post a Comment

0 Comments