நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்- முழு விபரம்


நாட்டில் மேலும் 284 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 214 பேர் மினுவாங்கொடை – பேலியகொட கொத்தணியில் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

54 பேர் சிறைச்சாலை கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 16 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 94,848 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் 184 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின்  மொத்த எண்ணிக்கை 91,456 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 2,796 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments