அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானது - வைத்தியர் சுதத் சமரவீர
நாட்டில் கொரோனா தொற்று குறித்து அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயில் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா கொத்தணி பல உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு சில மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு இடங்களில் ஏழுமாற்றாக மேற்கொண்ட பரிசோதனையில் அதிகமானோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து கவனமாக இருக்குமாறு வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டிகளைச் சரியான முறையில் பின்பற்றாமையால் எதிர்காலத்தில் பல கொரோனா கொத்தணி ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் எதிர்வரும் வாரம் மிகவும் முக்கியமானது என இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
No comments: