மு.பாஉ சீ.யோகேஸ்வரன் மீது கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களுக்கு கல்முனை நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக தனது முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டாரென்ற ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களுக்கு கல்முனை பொலிஸார் கல்முனை நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். 

இவ்வழக்கானது எதிர்வரும்  30.04.2021 அன்று நீதிமன்றிற்கு வருகின்றது. இன்று (09.04.2021), வாழைச்சேனை பொலிஸார், கல்முனை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குக்கான அழைப்பாணையினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களின் இல்லத்திற்கு வந்து இன்று அவரிடம் கையளித்தனர். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டமையின் பிரகாரம் முன்பு திருக்கோயில் பொலிஸாராலும், பொத்துவில் பொலிஸாராலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த வழக்குத்தாக்கல் நீதிமன்றில் எடுக்கப்பட்டு, திருக்கோயில் போலீசார் தாக்கல் செய்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், பொத்துவில் போலீசார் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 

தற்போது கல்முனை பொலிஸார் அவருக்கு எதிராக நீதிமன்றக் கட்டளையினை அவமதித்ததாகக் கூறி வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். ஆகவே எதிர்வரும் 30ந் திகதி சீ. யோகேஸ்வரன் அவர்கள் நீதிமன்றில் ஆஜராகின்றார்.
Post a Comment

0 Comments