ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து - 25 வயதுடைய இளைஞன் பலி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவங்கொட, யப்பாகம பகுதியை சேர்ந்த 25 வயதுடைய புபுது ஜீமந்த என்ற இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் வழியாக மினுவாங்கொடை நோக்கி 2 இளைஞர்கள் பயணித்த சைக்கிள் முன்னால் சென்ற லொறியை முந்தி செல்கையில் எதிரே மற்றொறு லொறி வந்ததை அடுத்து திடீரென மீண்டும் வலது பக்கம் சைக்கிளை செலுத்திய போது, சைக்கிள் முந்திச் சென்ற லொறி பின்னால் வந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் குடாகம பகுதியில் இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற இவ் விபத்தில் சைக்கிளை செலுத்திய இளைஞன் ஸ்தலத்திலே பலியனதுடன் அதில் பயணித்த மற்றுமொரு இளைஞன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment

0 Comments