குளவிகள் கொட்டியதினால் 20 பேர் பாதிப்பு

க.கிஷாந்தன்


தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் .இன்று (22) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 20 பேரும், ஆண் தொழிலாளர்களாவர்.

இவர்களில் 04 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.No comments: