கம்பஹா மாவட்டம் - கொரோனா பரவல் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்


கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில் கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக  பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திவுலப்பட்டிய  மற்றும் கட்டான  பொதுசுகாதார பரிசோதகர்   தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பகுதிக்கு பயணத்தடை விதிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

திவுலுப்பட்டிய மற்றும் ராகம  ஆகிய பகுதிகளில்  கடந்த  13 மற்றும்  15ம் திகதிகளில்  இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: