கசக்கஸ்தான் நாட்டில் இருந்து முதலாவது சுற்றுலா குழு நாட்டிற்கு வருகை


சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கசக்கஸ்தான் நாட்டில் இருந்து முதலாவது சுற்றுலா குழு இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

கசக்கஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான விமான சேவை முதல் முறையாக இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சுற்றுலா பயணிகளுடான குறித்த விமானம் கசக்கஸ்தான் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 164 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: