புதியவகை வைரஸ் தொற்று - சுகாதார அமைச்சினால் ஆய்வுகள் முன்னெடுப்பு


நாட்டில் கண்டறியப்பட்ட பிரித்தானிய வைரஸ் தொற்று குறித்து சுகாதார அமைச்சினால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொற்று நோய் தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ்தொற்றுக்குள்ளான பலர் நாட்டின் பல்வேறு பாகங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்ககைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில்  நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மூலம்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக   ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் தற்போது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: