தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய 3095 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு மாறாக செயற்பட்ட 3095 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பிலே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளில் பிரதானமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளான, முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யபட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண குறிப்பிட்டுள்ளார்.


No comments: