வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட மூன்று பேருக்கு கொரோனா

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ பெற்றோசோ வரை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு  பேருக்கும்  கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் தாதியர் ஒருவரின் கணவர் உட்பட மூன்று பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட  குறித்த இரண்டு பேரும் சுகயீனம் காரணமாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்,என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இந்த இரண்டு பேருக்கும் இன்று (14) தொற்று உறுதி செய்யப்பட்டதாக பொது சுகதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேலை தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் குறித்த வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் ஒருவரின் கணவர் ஆவார்.இரண்டு பேரில் ஒருவர் வலப்பனை மற்றும் பேராதெனிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும்,மற்றைய நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

தொற்றுக்குள்ளான மூன்று பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: