நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  656 இலங்கையர்கள் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 06 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் சவுதி அரேபியாவில் இருந்து 76 பேரும் மாலைதீவில் இருந்து 58 பேரும் ஜப்பானில் இருந்து 52 பேரும் கட்டாரில் இருந்து 38 பேரும் ஏனையவர்கள் வேறு நாடுகளில் இருந்தும் வருகைத் தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: