நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  73 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 942 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை கொரோனா கொத்தணியிடன் தொடர்புடைய 939 பேரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூவரும்   இவ்வாறு தொற்றுடன்  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 567 பேர்  குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,211 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 6,526 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: